Monday, December 3, 2018

பூம்புகார் சம்பாதி வனம்.

பூம்புகாரில் சம்பாதி வனம் என்பது சூரிய கிரகணத்தால் சிறையிழந்த கழுகரசனாகிய சம்பாதி தவமிருந்த வனமாகும்.
இக்காலத்தில் வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும் புள்ளிருக்கு வேளூரில் முற்காலத்தில் சம்பாதி, சாடயு என்னும் கழுகரசர் இருவர் சிவபெருமானை வழிப்பட்டிருந்தனர். இவ்விருவரில் சம்பாதி என்பார் நாள்தோறும் ஒரு யோசனை(ஒன்பது மைல்) அளவு சென்று நறுமலர்களைப் பறித்துவந்து இறைவனை அருச்சித்துப் போற்றினர் என்பது புராண வரலாறு.இச்செய்தியினைக் கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர்
"கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடா என்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே"
எனவும்,
"யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே"
எனவும் வரும் திருப்பாடல்களிபற் குறித்து போற்றி யுள்ளார்கள். நான்கு குரோசம் கொண்ட தூரம் ஒரு யோசனை என்றும் ஒரு குரோசம் என்பது இரண்டேகால் மைல் என்றும் கூறுவர்.எனவே,சுமார் ஒன்பது மைல் தூரம் ஒரு யோசனை என கொள்ளலாம்.இக்கணக்கினைக் கொண்டு சிந்தித்தால் சம்பாதி என்ற பெரியார் புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானை பூசித்தற் பொருட்டு நாள்தோறும் நறுமலர்களைப் பறித்து வந்த நந்தவனம் இப்பூம்புகார் நகர  எல்லையை அடுத்து இருந்தது என்பது நன்கு விளங்கும்.அது தற்போது பெருந்தோட்டம் என வழங்கும் ஊராகும்.திருஞானசம்பந்தர் பதிகத்தில் குறித்த இக்குறிப்புக்கு பொருந்த "சம்பாதி யிருந்த வனம் சம்பாதிவனம்"இப்புகார் நகரத்தில் இருந்ததென மணிமேகலை கூறும் குறிப்பு அமைந்திருந்தல் கணலாம் என சதாசிவப்பண்டாரத்தார் கூறுகிறார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...