Wednesday, April 18, 2018

திருஞானசம்பந்தர் அவதார இல்லம்.

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை பாடசாலையாக திகழ்கின்றது.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர்க்கும் பகவதியாருக்கும் பிறந்த ஆளுடையப் பிள்ளை தந்தையோடு நீராட சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில் குளக்கரைக்கு சென்ற ஆளுடையப் பிள்ளை அங்கு தேவி பார்வதியின் கையால் ஞானப்பால் உண்டு ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றார். 'தோடுடைய செவியன்'என தனது முதல் பதிகத்தைப் பாடினார்.பின்பு பல தலங்களைப் பாடி பல அதிசயங்களை நிகழ்த்தி இறுதியாக  நல்லூர்  பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் திருமணக் கோலத்தில் தன் தாய்,தந்தை சுற்றத்தாருடன் சிவஜோதியில் கலந்தார். (இவற்றை திருஞானசம்பந்தர் வரலாற்றில் விரிவாக காணலாம்.)
இரா.விக்ரமன்,சிதம்பரம்.





No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...