Tuesday, April 17, 2018

மகேந்திர வர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம்

திருநாவுக்கரசரால் சைவனாக மாறிய மகேந்திரவர்மன் கடலூர் பாடலிபுத்திரம் எனும் திருப்பாதிரிபுலியூரில் இருந்த சமணப்பள்ளிகளை இடித்து திருவதிகையில் தன் விருதுப் பெயரான குணபரன் என்னும் பெயரில் குணபரஈச்சுரம் என்னும் சிவன் கோவிலை எடுப்பித்தான்.சேக்கிழாரின் பெரியப்புராணம் மூலம் தான் மகேந்திர வர்மன் கட்டிய கோவிலை அறிய முடிகிறது."வீடறியாச் சமணர்மொழி மெய்யுணர்ந்த பொய்யென்று காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் அமணரர் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"என பெரியபுராணத்தில் வரும் பாடலால் அறியலாம். இக்கோயில் பாண்டியர் காலத்தில் செங்கல் கோயிலாக தான் புதுப்பிக்கப்பட்டது.பின்பு அவையும் இடித்து தற்போது புதிப்பிக்கப்பட்டுள்ளது.இக்கோயிலை சுற்றி சமண சிற்பங்கள் இருந்துள்ளன.தற்போது அவை இங்கு இல்லை. இரா.விக்ரமன்,சிதம்பரம்.







2 comments:

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...