Friday, December 30, 2022

நக்கன் கொற்றி எடுத்த திருப்பரங்குன்றம் குடைவரை கோயில்

பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் படைத்தளபதி சாத்தான் கணபதி இக்கோயில் சிவபெருமானுக்கு திருப்பணி செய்து குளத்தையும் சீர் செய்தான்.இவன் மனைவி நக்கன் கொற்றி என்பவள் துர்க்கைக்கும்,சேஷ்டா தேவிக்கும் கோயில் எடுத்தாள்.மூத்த தேவி தனது மகன்,மகளுடன் அமர்ந்து இருக்கிறாள்.மற்றொரு கோயில் துர்க்கை கோயில் இவை பெரிய கோயில் இந்த தேவி வலது கை அபயமுத்திரையும் இடது கை துடை மீதும் மேல் இரண்டு கை பாசம்,அங்குசமுடனும் வாலக்காலை மடித்து இடக்காலை கீழே ஊன்றி தாமரை பீடத்தில் அமர்ந்துள்ளாள்.கீழே இரண்டு சிங்கமும் தேவியை சுற்றி பாலசாரர்,வேதவிசயர் முனிவர்களும் இருபுறம் புல்லாங்குழல் ஊதுவர் யாழை வாசிப்பவர் மற்றும் நந்தி.தேவியின் வலபுறம் உள்ள மனித உருவம் கையில் வாளும் கேடயத்துடன் உள்ளது கேடயத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது இது பாண்டிய மன்னன் என்கின்றனர்.இந்த உருவம் படைதளபதி சாத்தன் கணபதியாக கூட இருக்கலாம். இக்குழுவில் 21சிற்பங்கள் உள்ளன.இச்சிற்பம் அப்போது பெண்கள் உயர்த்தி போற்றும் விதமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சிற்பமாக கருதப்படுகிறது.தற்போது இந்த சிற்பம் அன்னபூரணி,இராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கபடுகிறது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

1 comment:

  1. DEAR BROTHER, I NEED SOME CLARIFICATION REGARDS SHREE MADURAPATHI AMMAN. BECAUSE WE FOUND ONE ANCIENT IDOL OF TRANSGENDER GOD UNDER BROKEN LEFT HAND AND RIGHT HAND SWORD. IT SHOWS THAT RIGHT PART AS FEMALE AND LEFT PART AS MALE. SAME KIND OF THIS IDOL WE SEEN IN YOUR ARTICLE ABOUT THIRUVELVIKUDI TEMPLE. BOTH OF THEM IDENTICAL BUT OUR IDOL STAND OVER SOME ONE'S BODY AS --VADHAM SEIYUM GOD.

    PLEASE CONTACT ME VIA 9500774245 OR MY EMAIL ID OF rrtulsie@gmail.com. WE ALREADY SEND EMAILS TO YOU EARLIER. SO PLEASE FIND THEM AND CLARIFY US IF POSSIBLE

    YOURS TRUELY,
    P.RAJESH,
    2F/985 P&T COLONY 5TH STREET(WEST),
    THOOTHUKUDI-628008,
    MOB-9500774245

    ReplyDelete

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...