Sunday, April 24, 2022
பழையாறை அரண்மனை
ஆழ்வார் பராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார் பழையாற்றுக்கோயில் மாளிகையில் ஆதிபூமியில் எழுந்தருளுளி இருந்து இராஜேந்திர சோழன் 4ஆம் ஆட்சி ஆண்டில் இராஜராஜ சோழன்
தமைக்கையார் குந்தவையார் திருவிசலூர் கோயிலுக்கு பழையார் அரணமனையில் இருந்து நிலம் அளித்தார் என இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன.சங்கால சோழர்களுக்கு பின் வந்த சோழர்கள் பலகாலமாக இங்கே வசித்து வந்ததாலோ இந்த பழையார் நகரை ஆதிபூமி என இக்கல்வெட்டு குறிப்பிட்டு இருக்கலாம்.
விக்ரமன் ராமன்.
Monday, April 11, 2022
சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம்
சோழர் கால முதல் ஆடவல்லான் சிற்பம்.
சோழர் காலத்தில் ஆடவல்லான் சிற்பம் சிறியதாகவே வடித்தனர்.அவை பராந்தக சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட திருவாலீஸ்வரம் கோயிலில் உள்ள ஆடவல்லான் சிற்பம் பாண்டிய நாட்டு சிற்பி ஒருவனால் எடுக்கப்பட்டது.சோழநாட்டு சிற்பியால் பராந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்ட திருவாவடுதுறை கோயிலில் தட்சிணாமூர்த்தி மேல் தோரணத்தில் உள்ள ஆடவல்லான் சிற்பமும் சோழர் ஆட்சியில் முதல் ஆடவல்லான் சிற்பங்களாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆடல்வல்லான் செப்பு திருமேனிகள் பல இந்த சிற்பங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டன. பராந்தக சோழன்,செம்பியன் மாதேவி,இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் காலங்களில் எடுக்கப்பட்ட ஆடவல்லான் செப்பு திருமேனிகள் கண்களை கவரும் கொள்கை அழகு திருமேனிகள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Comments (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
தில்லையில் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷன் எனும் பதஞ்சலி முனிவரும் தவம் செய்து நடராஜர் சிவகாம சுந்தரி திருநடன காட்சியை கண்டனர். இமயமலைக்கு த...

