Sunday, October 31, 2021

ஆவி உனக்கு அமுது எனக்கு ஆவுடையார் கோயில்

இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் உண்பதில்லை அதில் மணம் ஆவியை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்.ஆனால் ஒரு கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவனே சாப்பிட்டு கொண்டு இருந்தார்.மாணிக்கவாசகர் காலத்தில் ஆவுடையார் கோயிலில் இறைவன் சிவபெருமான் தினமும் தனக்கு படைக்கும் உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டு வெறும் பாத்திரங்களை போட்டு விடுவார்.அடியார்களும் பக்தர்களும் தினமும் பிரசாதம் கிடைக்கவில்லையே என வருந்தினர் இதை அறிந்த மாணிக்க வாசகர் இறைவனிடம் ஐய்யனே தங்களுக்கு படைக்கும் உணகளின் ஆவி மணம் மட்டுமே ஏற்றுக் கொண்டு உணவை எங்களுக்கு அளிக்கும்படி கருணை காட்டுங்கள் என வேண்ட இறைவனும் சரி அதில் உள்ள ஆவியை யாம் ஏற்றுக்கொண்டு அமுதை உங்களுக்கு அளிக்கிறேன் என்றார்.ஆவி உனக்கு அமுது எனக்கு.ஆவிடையார் கோயில் கோயிலில் புழுங்கல் அரிசி சாதத்தை சுடசுட ஆவி பறக்க பாகற்காய் கூட்டுடன் ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர். இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...