Monday, January 13, 2020

கொற்கை கண்ணகி கோயில்

பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்த பின்பு கொற்கையில் இளவரசானாக இருந்து ஆட்சி செய்த வேற்றிவேற் செழியன் பாண்டிய நாட்டை அரசாளும் உரிமை அடைந்தான்.சேரன் செங்குட்டுவன் பத்தினிக்கு படிமம் எடுக்க இமயம் சென்ற போது.மதுரையில்  வெற்றிவேற் செழியன் முடி சூடி கொண்டு ஆட்சி செய்தான். கண்ணகி சாபத்தால் பாண்டிய நாடு மழைவளம் இல்லாமல் வரண்டது.  கண்ணகியின் சினம் தணிக்க கொற்கையில் வெற்றிவேற் செழியன் கண்ணகிக்கு கோயில் எடுபித்து ஆயிரம் பொற் கொல்லர்களை பலி கொடுத்து பெருவிழா நடத்தினான். இதனால் கண்ணகி சினம் தணியவே பாண்டிய நாடு  நன்னிலை அடைந்தது. வெற்றிவேற் செழியன் ஒருமுலை குறைத்த திருமாபத்தினிக்கு ஆயிரம் பொற்கொல்லரை பலி கொடுத்தான் என்பது சாத்தியம் அல்ல கல்வெட்டுகளில் ஆயிரம் கற்றளி எனும் பெயர் வருகிறது அதனால் அவன் ஆயிரம் கற்றளிகளை எடுத்தவன் என பொருள் அல்ல அது அவன் பெயர்.அதே போல ஆயிரவன் பொற்கொல்லன் என்பவன் கண்ணகி கோயிலுக்கு தானே முன்வந்து மன்னர் முன்பு தன்னை பலி கொடுத்து கொண்டிருப்பான்.பின்பு அவை வெற்றிவேற் செழியன் கண்ணகி கோயில் கட்டி ஆயிரம்பொற் கொல்லரை பலி கொடுத்தான் என செய்தியாக மாறி இருக்கலாம். இக்கோயிலில் இருந்த கண்ணகி சிலை காணாமல் போய்விட்டது. தற்பொழுது காளியம்மன் சிலை உள்ளது.இங்கு இருந்த கண்ணகியின் பெயர் செழுகை நங்கை என அழைக்கப்பட்டது. இக்கோயில் பாண்டியன் வெற்றிவேல் செழியன் கட்டியதால் கண்ணகி செழிய நங்கை என அழைக்கப்படாள் பின்பு அவை செழுகை நங்கை என பெயர் மாற்றம் அடைந்தாள். தற்பொழுது வெற்றிவேல் அம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது.இவ்வூரில் உள்ள பழையான சிவன் கோயில் உள்ளது. அவை 'அக்கசாலை ஈசுவர முடையார் கோயில்' என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கொற்கை என்பது கல்வெட்டுகளில் மதுரோதயநல்லூர் என குறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை துறைமுகம் கொற்கையால் செல்வ செழிப்பு பெற்றதால் கொற்கை மதுரோதயநல்லூர் என அழைக்கப்பட்டதாம். இங்கு பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்ற வன்னிமரம் உள்ளது.பொற்கை பாண்டியன் ஆட்சி செய்ததால் இவ்வூர் பொற்கை என அழைக்கப்பட்டு பின்பு கொற்கை ஆனது எனவும் கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...