இக்கோயில் இராஜராஜ சோழனின் 7ஆம் ஆண்டு ஆட்சியில் செம்பியன் மாதேவியால் புதிப்பித்து கட்டப்பட்டதாகும்.பரதமாமுவனிவர் மகளாக பிறந்த பார்வதி இறைவனை திருமணம் செய்ய சிவலிங்க பூசை செய்து தவம் செய்தார்.பின்பு இறைவன் வந்து இறைவியின் கரத்தைப்பற்றினார். இறைவன் பாதங்களில் வீழ்ந்த பார்வதி இறைவா என் தாய் தந்தையிடம் அனுமதி பெற்று என்னை முறைபடி திருமணம் செய்யுங்கள் என வேண்டினாள். இறைவன் விதிமுறை வகுத்த நாமே பிழைத்தல் கூடாது அவ்வாறே நடத்திக் காட்டுவோம் என்றார்.அவ்வாறு திருமணம் நடைபெற்றது.இதனால் இறைவன் சொன்னவாறறிவார் அழைக்கப்படுகிறார். திருமணம் நடந்த அடையலமாக இறைவன் கைலாத்திலிருந்து எடுத்து வந்த உத்தால மரத்தையும் அவர் பாதுகைகளையும் இங்கு விட்டு சென்றுள்ளார்.அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.
கல்வெட்டுகளில் இறைவன் சொன்னவாறறிவார், வீங்குநீர்துருத்தி கற்றளியுடைய மகாதேவர் என அழைக்கப்படுகிறார்.இறைவியின் திருப்பெயர் அரும்பன்ன வனமுலையார்,நறுஞ்சாந்திள முலையம்மை என அழைக்கப்படுகிறார்.இங்கு நடராஜ பெருமானை வழிபடும் ஒரு சிற்பம் உள்ளது அது கண்டராதித்த சோழனாக இருக்கலாம்.
இராஜேந்திர சோழன் 5 ஆம் ஆண்டில் அவனது படைகள் வெற்றி அடைய சைவர்களுக்கு உணவளிக்க நிலம் அளிக்கபபட்டது.
இராஜேந்திர சோழனின் 23 ஆம் ஆண்டில் இராசேந்திரசோழவள நாட்டு திருக்கழுமலநாட்டு வீரவவசோழ நல்லூரில் சிவதன்மசேகரனான பரமபத்மனால் தன் அரசன் இராஜேந்திர சோழனுக்கு தீமை விலகி நன்மை உண்டாக திருக்கற்றிளியுடைய மகாதேவர்க்கு உச்சிபொழுது பணிபுரியும் சிவயோகியர் உணவுக்காக நிலம் அளித்துள்ளான்.
இராஜேந்திர சோழனின் 5 ஆம் ஆண்டில் 35 நாள் திருத்துருத்தி சொன்னவாறறியுடைய மகாதேவர்க்கு நிலமளித்து சில கிராமங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 80 காசுவீதம் அரசன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளகிய மார்கழித் திருவாதிரையில் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டாம் இராஜேந்திரன் 9 ஆம் ஆண்டில் கங்கை கொண்ட சோழபுரத்து வியாபாரி வெண்காடன் ஆடவல்லான் என்பான் 2ஆம் இராஜேந்திர சோழனுக்கு நன்மை உண்டாகவும் சொன்னவாறறிவார் கோயிலில் உச்சிபொழுது வழிபாட்டிற்கும் மகேஸ்வரர்களுக்கு உணவளிக்கவும் நிலமும்,பொன்னும் அளித்தான்.
மேலும் இங்கு விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன்,கிருஷ்ணா தேவராயர் கால கல்வெட்டுகள் உள்ளன.