கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழுந்த கூன்பாண்டியன் எனும் மாறன் அரிகேசரி திருஞானசம்பந்தரால் வெப்பு நோய் நீங்கி சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான். அவன் ஆட்சி கால தொடக்கத்தில் சீனிப் பயணி யுவான் சுவாங் பாண்டிய நாட்டிற்கு வந்தான்.அவன் பாண்டிய நாட்டை சுற்றிப் பார்த்து தன் வரலாற்று குறிப்பில் இங்கு உப்பும் முத்தும் மிகுதியாக கிடைக்கின்றன.பக்கத்து தீவுகளில் கிடைக்கும் முத்துக்களையும் இங்கு கொண்டு வருகின்றனர்.வேறு விளைபொருள்கள் இந்நாட்டில் மிகுதியாக கிடைக்கவில்லை.இங்கு வெப்பம் அதிகமாக உள்ளது.பாண்டிய நாட்டு மக்கள் கருத்தமேனி யுடையவராய் இருக்கின்றனர் போர் வலிமை மிகுந்த திறமைசாலியாகவும் இருக்கின்றனர். இந்நாடு வாணிபத்தால் வளம்பெற்று செல்வத்தால் நிறைந்துள்ளது.என தான் நேரில் அறிந்தவற்றை வரலாற்று குறிப்பில் எழுதியுள்ளான்.பாண்டிய நாடு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எவ்வாறு இருந்தன என்று ஒருவாறு அறியலாம் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
No comments:
Post a Comment