Wednesday, April 10, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் நூறுகால் மண்டபம்

முதல் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் படைத் தலைவராய்  விளங்கிய  மணவிற் கூத்த காலிங்கராயன் இந்த நூறுகால் மண்டபத்தை கட்டி அதில் உள்ள பலத் தூண்களில் விக்கிரம சோழன் பெயரை பொறித்துள்ளான்.இது விக்கிரம சோழன் திருமண்டபம் என அழைக்கப்பட்டது.இவன் தில்லை திருபணி மகத்தானதாகும்.இவன் கூத்தபிரானை வணங்கும் உருவம் இந்த மண்டபத்தில் கீழே உள்ளது. முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சியில் அரச பிரதிநிதியாக  இருந்து ஆட்சி செய்த வீரப்பாண்டியன் என்பவன் இந்த மண்டபத்தில் வீராஅபிடேகமும் விஜயபிடேகமும் செய்து கொண்டு இந்த மண்டபத்தை வீரபாண்டியன் திருமண்டபம் என மாற்றி அதை தெற்கு வாயிலில் பொறித்துள்ளான். இதன் அருகில் தன் குல தெய்வமான மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தை கட்டியுள்ளான்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



Wednesday, April 3, 2019

கி.பி.7ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாடு

 கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழுந்த கூன்பாண்டியன் எனும் மாறன் அரிகேசரி திருஞானசம்பந்தரால் வெப்பு நோய் நீங்கி சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான். அவன் ஆட்சி கால தொடக்கத்தில் சீனிப் பயணி யுவான் சுவாங் பாண்டிய நாட்டிற்கு வந்தான்.அவன் பாண்டிய நாட்டை சுற்றிப் பார்த்து தன் வரலாற்று குறிப்பில் இங்கு உப்பும் முத்தும் மிகுதியாக கிடைக்கின்றன.பக்கத்து தீவுகளில் கிடைக்கும் முத்துக்களையும் இங்கு கொண்டு வருகின்றனர்.வேறு விளைபொருள்கள்  இந்நாட்டில் மிகுதியாக கிடைக்கவில்லை.இங்கு வெப்பம் அதிகமாக உள்ளது.பாண்டிய நாட்டு மக்கள் கருத்தமேனி யுடையவராய் இருக்கின்றனர் போர் வலிமை மிகுந்த திறமைசாலியாகவும் இருக்கின்றனர். இந்நாடு வாணிபத்தால் வளம்பெற்று செல்வத்தால்  நிறைந்துள்ளது.என தான் நேரில் அறிந்தவற்றை வரலாற்று குறிப்பில் எழுதியுள்ளான்.பாண்டிய நாடு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எவ்வாறு இருந்தன என்று ஒருவாறு அறியலாம் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...