Tuesday, January 22, 2019

சிதம்பரத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய ஐயனார் கோயில்


சிதம்பரம் காரியபெருமாள் கோயில் தெருவில் உள்ளது.ஆய்வாளர்கள் இது மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது என கண்டறிந்துள்ளனர்.கோயிலின் சுற்றி துர்கை,காளி,விநாயகர் தட்சிணாமூர்த்தி மற்றும் அர்த்தநாரிஸ்வரர் ஆகிய











சிலைகள் உள்ளன.அர்த்தநாரிஸ்வரரின் கீழே மூன்றாம் குலோத்துங்க சோழன் குடும்பத்துடம் வணங்கும் அறியவகை புடைப்பு சிற்பம் உள்ளது.கோயிலின் எதிரில் விநாயகருக்கும்,முருகனுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. திருக்கோயிலின் கருவறை முன்மண்டபத்தில் இடப்புற பக்கவாட்டுச்சுவரில்  அறியப்படாத இச்சிற்பங்கள் காணப்படுகின்றன.   சிற்பமானது 4 அடி நீளமும்    2.5  அடிஅகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பெற்றுள்ளது.சிற்பத்தில் சர்வலட்சணமும் பொருந்திய  ஒரு காலை உயர்த்தி மற்றொரு காலை சற்றே தூக்கிபாயும் நிலையில்  அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட   ஆண் குதிரையில்அமர்ந்த நிலையில்,  கம்பீரத்துடன் கிரீடம் அணிந்த சோழமன்னர் பவனி வரஆயத்தமா வது போன்றும், அவனருகில் சோழ மாவீரன் ஒருவன்  கொடி அசைப்பது போன்றும் செதுக்கப்பெற்றுள்ளது.
  அதே கற்பலகையில் செதுக்கப்பட்டுள்ள  இரண்டாவது சிற்பத்தில் வணங்கிய நிலையில் மூன்றாம் குலோத்துங்கனும் அவனுக்கு அருகில் வணங்கும் தோற்றத்தில் மூன்று பெண்டிரின் உருவமும் காணப்படுகின்றது.மூன்று பெண்டிரில் இருவர் குலோத்துங்கனின் மனைவிகளான புவனமுழுதுடையாள் மற்றும் இளைய நம்பிராட்டி  ஆவார்கள்.  இன்னொரு பெண் குலோத்துங்கனின் மகளாவார். இங்குள்ள சிற்பத்தொகுதியில் முதலாவதாக வணங்கிய நிலையில் காணப்படும் மற்றொரு நபர் யார் என அறிவது அவசியம் அரசருக்குரிய உடை அணிந்து குலோத்துங்கனுக்குச்  சமமாக சிற்பத்தில் காட்டப்பட்டிருக்கும்  அம்மாவீரனை முதலாம் கோப்பெருஞ்சிங்கனாக கருதலாம். ஏனெனில் தனது மகளை  காடவர் தலைவனான கோப்பெருஞ் சிங்கனுக்கு  மணமுடித்துக் கொடுத்து காடவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தான் மூன்றாம் குலோத்துங்கன். ஆகவே மனைவிமார்  மகள். மருமகன்  சகிதம் குடும்பத்துடன் இருப்பது போன்று இச்சிற்பகற்பலகை வடிக்கப்பட்டுள்ளதாக கொள்ளலாம். மேலும் திருக்கோயிலின்  வெளிப்புறமுள்ள  விநாயகர் சன்னதியின் அருகாமையில் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் சிதைந்த  உருவச்சிலை ஒன்றும் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. இங்கு ஆய்வில் கண்டறியப்பட்ட கோப்பெருஞ்சிங்கனின் சிலை போன்று உருவ அமைப்பில், சாயலில் தில்லை நடராஜர் ஆலய கிழக்கு கோபுர நுழைவாயிலின் வலப்புறம் வணங்கிய நிலையில் காணப்படும் கோப்பெருஞ்சிங்கன் சிலை மேலும் இக்கூற்றினை வலுப்படுத்துவதாக உள்ளது. இதன் வாயிலாக மூன்றாம் குலோத்துங்கனுடன் வணங்கிய நிலையில் நிற்பது கோப்பெருஞ்சிங்கனே என உறுதிபடுத்தலாம்.
கல்வெட்டு
, கோயிலின் வடபுறகோஷ்டத்தின்   குமுதவரியில் கண்டறியப்பட்ட கல்வெட்டானது,  திரிபுவனச் சக்ரவர்த்திகள் என குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தியுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்   இத்திருக்கோயிலுக்கென்று பதினோராயிரம் காசுகளும் தானம் அளித்து,  கோயிலுக்கென்று கிணறு எடுப்பித்து, நிலதானமும் வழங்கப்பெற்றதை குறிக்கிறது. திருச்சிற்றம்பலமுடைய தேவன் என்பான் இக்கல்வெட்டில் கையெழுத்து பொறித்துள்ளான்.    மதுரையும் ஈழமும்கொண்டு, முடித்தலை கொண்டஎனப்பலவாறும் மூன்றாம் குலோத்துங்கனை கல்வெட்டு போற்றுகிறது. முடித்தலை கொண்டபெருமாள்   ( பாண்டியனை வென்றதால்)என்ற பட்டப்பெயர்  குலோத்துங்கனுக்கே உரியதாகும். மூன்றாம்குலோத்துங்கனின் வேண்டுகோளுக்கிணங்க அவனது அதிகாரியான திருச்சிற்றம்பலமுடைய தேவன் என்பான்  இத்திருக்கோயிலில் தானம் வழங்கியுள்ளதை கல்வெட்டுக்கள்  உறுதிபடுத்துகின்றன.
 
 தற்போது திருக்கோயில் அமைந்திருக்கும் பகுதியினைச் சுற்றிசோழர் காலத்திலும்,  45 ஆண்டுகளுக்கு முன்னர்  வரை  பெரிய அளவிலான நந்தவனம் இருந்துள்ளது.  தில்லைநடராஜ பெருமானுக்கு வழிபாடிற்கென  நந்தவனமும் , இலுப்பை எண்ணெய்தேவைக்காக இலுப்பை மரங்களும்,கமுகு, பாக்கு  மரங்களும்  இவ்விடத்தில் இருந்துள்ளன.  திருக்கோயிலின்  அர்த்தமண்டபத்தில்  இடக்கோடியில் புதிதாக எங்களால்  கண்டறியப்பட்ட 18-19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது.   கல்வெட்டுச் செய்தியாவது “சிதம்பரத்திலிருக்கும் ஸ்ரீ அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகராகிய காரியபெருமாள் சுவாமி கோயிலும் அதன்கரை  ஓரமிருக்கும் பல விருட் ஷங்களும், நந்தவனங்களும் கோவில் திருப்பணி கல்லாலான சொத்துக்களை எவரும் இம்சிக்காமலிருக்க வேண்டியது  அப்படிஇச்சை கொண்டவர்கள் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவார்கள் பொன்னம்பல பரதேசியால் இந்த அறமெயப்படட்டது” என்றுதெரிவிக்கிறது.
மேலும் கோயிலின் உள்ளே பல சிற்பங்களை வெளியிருந்து கொண்டு வந்து வைத்துள்ளனர். தில்லைக்காளி அல்லது நிசம்பசூதனி,இரண்டு சண்டிகேசுரர்,ஆவுடை இல்லாத லிங்கம்,நந்தி,மன்னன் ராணி வணங்கும் தனி சிற்பம் மற்றும் தனியாக ஒரு ராணி வணங்கும் சிற்பம் கருப்புசாமி ஆகியவை உள்ளன.இக்கோயிலின் சிவன் கோயில் இருந்ததா என ஆராய்ச்சியும் செய்து வருகிறார்கள்.வரலாறு நன்றி இல.கணபதி அண்ணாமலை பல்கலைக்கழகம்.

Thursday, January 17, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் நிருத்த சபை.

நடராஜரும் காளியும் போட்டி நடனம் ஆடிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தளுளியுள்ள நிருத்த சபை முன்பு மரத்தால் ஆன இந்த மண்டபத்தை கருங்கல் மண்டபமாக திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் தான் கட்டிய தேர் மண்டபம் போல இந்த மண்டபத்தையும் கட்டி சரப மூர்த்தியை எழுந்தருளவித்துள்ளான்.இந்த மண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் நடராஜப் பெருமானை நேருக்கு நேராக வணக்கம் சிறிய சிற்பம் உள்ளது.



Sunday, January 6, 2019

மணவிற் கூத்த காலிங்கராயன்.

முதல் குலோத்துங்க சோழன்,விக்கிரம சோழன்,இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலங்களில் படைத்தலைவராய் இருந்து திருவதிகை, தில்லையில் பல திருப்பணிகளை செய்த மணவிற் கூத்த காலிங்கராயன்.

Friday, January 4, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம்.




1516 ல் கிருஷ்ணதேவராயர் தனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாக சிதம்பரம் நடராஜர் வடக்கு கோபுரத்தை கட்டினார். ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் ஸ்ரீ வீரப்பிரதாப ஸ்ரீ கிருஷ்ண தேவராயன் தர்மம் ஆகா சிம்ஹாத்திரை பொட்டுனூருக்கு எழுந்தரு ஜெயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பலத்தானை சேவித்து வடக்கு கோபுரம் கட்டுவித்த சேவை’ எனும் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோபுரத்தில் கிருஷ்ண தேவராயர் சிலையும் அதன் அருகில் இருவர் வணங்கும் சிலையும் உள்ளது அவ்விருவரும் இகாகோபுரத்தை கட்டிய சிற்பிகளாக இருக்கலாம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...