சோழ மன்னர்கள் சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றி வந்தது போல திருவாரூர் தியாகராஜ பெருமானை போற்றி வந்தனர். சோழர் முன்னோராகிய முசுகுந்த சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த தியாகராஜ பெருமானை இராஜராஜ சோழன் வழிபட்டு வந்துள்ளான். "ஆரூர்த்தியாகேசர் பதம் பணிந்து செங்கோலோச்சியலகில் புகழ்பெறு ராசராச மன்னர்" தியாகராஜர் மீது அளவற்ற அன்பு கொண்ட இராஜராஜ சோழன் தஞ்சையில் கோயில் அமைத்து பின்பு இக்கோயிலில் தஞ்சை விடங்கர் எனும் தியாகராஜர் திருமேனியை எழுந்தருள வித்தான்.இவன் தமக்கை குந்தவையார் தஞ்சை விடங்கர் பிராட்டியார் திருமேனியை அளித்தார்.திருவாரூரில் தியாகராஜருக்கு நடைபெறும் பூஜைகள் உற்சவங்கள் போல இங்கும் நடைபெறுகிறது. திருவாரூரில் தியாகராஜருக்கு பூஜை முடிந்த பின்பு தான் மூலலிங்கத்திற்கு பூஜை நடைபெறும் அது போலவே தஞ்சை பெரிய கோயிலிலும் பூஜை நடைபெறுகிறது.தியாகராஜக்குரிய சுத்த மத்தளம்,எக்காளம் இங்கும் உள்ளன.திருவாரூரில் நடைபெறும் உற்சவத்தில் குறவஞ்சி நாடகம் நடைபெறும்.அதே போல தஞ்சையிலும் குறவஞ்சி நாடகம் நடைபெறுகிறது.திருவாரூர் கோயில் உற்சவத்தில் சுவாமி புறப்படும்போது சுந்தரர் திருமேனியை முன்பு எடுத்து செல்வார்கள்.ஆனால் இராஜேந்திர சோழன் காலத்தில் தியாகராஜர் உற்சவத்தில் சுவாமி முன்பு தனது தந்தை இராஜராஜ சோழன் திருமேனியை எடுத்து செல்லும்படி ஏற்பாடு செய்தான். தஞ்சையிலும் அவ்வாறு ஏற்பாடு செய்திருப்பான். அப்படி என்றால் இராஜராஜ சோழனுக்கு திருவாரூரிலும் ஒரு செப்பு திருமேனி இருந்துள்ளதா?அல்லது தஞ்சை கோயிலிருந்து இராஜராஜ சோழன் திருமேனி திருவாரூரிற்கு உற்சவத்திற்காக மட்டும் எடுத்து செல்லப்பட்டதா என்று தெரியவில்லை.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
No comments:
Post a Comment