Wednesday, February 5, 2020

இராசராசேச்சுரம் இலங்கை மாதோட்ட நகரம்

இராஜராஜ சோழன் ஈழ மண்டலத்தின் மீது படையெடுத்து சென்று வெற்றி கொண்டு அதை முழுவதையும் கைப்பற்றி தன் ஆட்சிக்கு உட்படுத்தி இலங்கையின் நடுவிலுள்ள பொலன்னருவா என்னும் ஊரை தலைநகராக வைத்துக் கொண்டான்.இப்படையெழுச்சியில் தலைமை வகித்து சென்றவன் இராஜேந்திர சோழனே ஆவான்.கொழும்பு நகரில் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள கருங்கற்பாறை ஒன்றில் "சோழமண்டலத்து க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு வெளாநாட்டுச் சிறுகூற்ற நல்லூர்க்கிழவன் தாழிகுமரன் ஈழமான மும்முடி சோழ மண்டலத்துக்கு மாத்தோட்டமான ராஜராஜபுரத்து எடுப்பித்த ராஜராஜ ஈஸ்வரத்து மகாதேவர்க்குச் சந்திராதித்தவல் நிற்க என்று தொடங்கும் கல்வெட்டு காணபடுகின்றதது.அக்கல்வெட்டால் சோணாட்டுத் தலைவன் ஒருவன் ஈழ மண்டலத்தில் மாதோட்ட நகரத்தில் தன் நாட்டு வேந்தன் பெயரால் இராச ராசேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எடுப்பித்து, அதற்கு அர்த்தயாம வழிபாட்டிற்கும் வைகாசித் திருவிழாவிற்கும் நிபந்தமாக இறையிலிநிலம் அளித்துள்ளான் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.மேலும் ஈழ மண்டலம் இராசராசன் சிறப்புப் பெயரால் மும்முடி சோழமண்டலம் என்று  அந்நாளில் வழங்கப்பெற்றது வந்தது என்பதும் மாதோட்டநகரம் ராசராசபுரம்  என மற்றொரு பெயரும் பெற்றிருந்தது அக்கல்வெட்டால் அறியமுடிகிறது என்கிறார் பண்டாரத்தார். சிறு செங்கல் கோயிலாக இருந்த திருஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற கோயிலேயே அத்தலைவன் கருங்கல் கோயிலாக எடுபித்து அதற்கு இராசராசேச்சரம் என பெயரிட்டான். இவை தற்போது கேதரீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.இக்கோயில் போர்த்துகீசியர் ஆட்சியில் கோட்டை கட்டவும் தேவலாயம் அடித்தளம் கட்டவும் இக்கோயிலை சிதைத்து கருங்கற்களை எடுத்து சென்று விட்டனர்.பின்பு இக்கோயில் புதையுண்டது நூறு வருடங்கள் முன்பு இக்கோயிலை தோண்டினர் அப்போது முழுவதும் சிதைந்து மண்டப கற்கள் லிங்கம், நந்தி,சோமஸ் கந்தர், கணேசர் போன்ற சில சிலைகள் கிடைத்தன.பின்னர் புதுப்பித்துக் கட்டியுள்ளனர். பழைய மூல லிங்கம் தோண்டும்போது பழுது பட்டதால் அதை கோயிலின் ஓரமாக வைத்துள்ளனர். மூலஸ்தானத்தில் புதிய லிங்கம் வைத்துள்ளனர்.

Monday, February 3, 2020

தஞ்சை விடங்கர் தியாகராஜர்

சோழ மன்னர்கள் சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றி வந்தது போல திருவாரூர் தியாகராஜ பெருமானை போற்றி வந்தனர். சோழர் முன்னோராகிய முசுகுந்த சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த தியாகராஜ பெருமானை இராஜராஜ சோழன் வழிபட்டு வந்துள்ளான். "ஆரூர்த்தியாகேசர் பதம் பணிந்து செங்கோலோச்சியலகில் புகழ்பெறு ராசராச மன்னர்"  தியாகராஜர் மீது அளவற்ற அன்பு கொண்ட இராஜராஜ சோழன்   தஞ்சையில் கோயில் அமைத்து பின்பு இக்கோயிலில் தஞ்சை விடங்கர் எனும் தியாகராஜர் திருமேனியை எழுந்தருள வித்தான்.இவன் தமக்கை குந்தவையார் தஞ்சை விடங்கர் பிராட்டியார் திருமேனியை அளித்தார்.திருவாரூரில்  தியாகராஜருக்கு நடைபெறும் பூஜைகள் உற்சவங்கள் போல இங்கும் நடைபெறுகிறது. திருவாரூரில் தியாகராஜருக்கு பூஜை முடிந்த பின்பு தான் மூலலிங்கத்திற்கு பூஜை நடைபெறும் அது போலவே தஞ்சை பெரிய கோயிலிலும் பூஜை நடைபெறுகிறது.தியாகராஜக்குரிய சுத்த மத்தளம்,எக்காளம் இங்கும் உள்ளன.திருவாரூரில் நடைபெறும் உற்சவத்தில் குறவஞ்சி நாடகம் நடைபெறும்.அதே போல தஞ்சையிலும் குறவஞ்சி நாடகம் நடைபெறுகிறது.திருவாரூர் கோயில் உற்சவத்தில் சுவாமி புறப்படும்போது சுந்தரர் திருமேனியை முன்பு எடுத்து செல்வார்கள்.ஆனால் இராஜேந்திர சோழன் காலத்தில் தியாகராஜர் உற்சவத்தில் சுவாமி முன்பு தனது தந்தை இராஜராஜ சோழன் திருமேனியை எடுத்து செல்லும்படி ஏற்பாடு செய்தான். தஞ்சையிலும் அவ்வாறு ஏற்பாடு செய்திருப்பான். அப்படி என்றால் இராஜராஜ சோழனுக்கு திருவாரூரிலும் ஒரு செப்பு திருமேனி இருந்துள்ளதா?அல்லது தஞ்சை கோயிலிருந்து இராஜராஜ சோழன் திருமேனி திருவாரூரிற்கு உற்சவத்திற்காக மட்டும் எடுத்து செல்லப்பட்டதா என்று தெரியவில்லை.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...