மன்னர்களின் மெய்கீர்த்தி கோயிளுக்கு நிலம் தானம் போர் வெற்றிகள் ஆகியவற்றை கல்வெட்டு குறிப்புகளை குறித்துள்ளார்கள் ஒரு அதிசய நிகழ்வை கல்வெட்டில் குறிப்பிட்டவன் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். கைலாயத்தை அளவெடுத்தது போல் தமிழ்நாட்டில் முதலில் கருங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி பெருங்கோயிலை காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை சிவப்பெருமானுக்கு எடுப்பித்தான். அவற்றின் குடமுழுக்கு தேதியை முடிவு செய்தான் ஆனால் அன்று வானத்தில் ஒர் ஒலி கேட்டது அது சிவபெருமான் தான் மன்னனை நோக்கி மகனே நீ எனக்காக கட்டிய கோயிலின் குடமுழுக்கு அன்று நான் வரஇயலாது ஏனென்றால் திருநின்றவூரில் பூசலார் எனும் பக்தன் எனக்காக கோயில் கட்டி அன்று குடமுழுக்கு செய்யயுள்ளான் அங்கு நான் செல்ல வேண்டியுள்ளதால் நீ கட்டிய கோயிலின் குடமுழுக்கு நாளை வேறொரு நாள் மாற்றி வைத்துக்கொள் அன்று யாம் வருவோம் வாழ்க எனக்கூறி அந்த ஒலி மறைந்தது.ஆனால் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் ஏழ்மையானவர் சிவபெருமானுக்கு கோயில் கட்ட வேண்டும் என ஆசை கொண்டார் அதற்கு தேவையான பொருள் இல்லமையால் தனது மனதிலே கோபுரம் குளம் ஆகிவற்றுடன் பெருங்கோயிலை கட்டி குடமுழுக்கு நாள் குறித்தார்.மன்னன் இறைவன் மனம்குளிர பெரியதிருக்கோயிலை அமைத்த பூசலாரை காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான். அங்கு இருந்தவர்களை நோக்கி பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது என்று கேட்டார்.அதுகேட்ட நின்றவூர் மக்கள் பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை என்றனர் மன்னன் பூசலார்
யார் எனக் கேட்டறிந்து அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி தாங்கள் அமைத்த திருக்கோயில் யாது அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் என்னிடம் கூறினார்.தாங்களை பணிந்து அறிய வந்தேன் என்றார். பூசலார் அரசன் கூறக்கேட்டு அதிர்ந்து இறைவன் என்னையும் தனது பக்தனாக அருள்செய்தாராயின் தான் கட்டிய கோயிலின் பெருமை எத்தகையது என்று தமக்குள்ளேயே சிந்தித்துத் தாம் மனத்தில் கட்டிய திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். மன்னன் அதிசயித்துப் பூசலாரை தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.மற்றொரு நாளில் மன்னன் குடமுழுக்கு நடத்தினான். கைலாசநாதர் கோயிலில் வடமொழி கல்வெட்டு ஒன்றில் கலியுகத்தில் அசரீரி(வானில் ஒலி) கேட்டவன் ராஜசிம்மன் என குறிப்பிடுகிறது. ஆனால் சேக்கிழார் பெரியபுராணத்தில்
சிவபெருமான் மன்னன் கனவில் கூறியதாக கூறுகின்றார்.
கல்வெட்டு:
துஷ்யந்த் ப்ரமுகையி ஹிருதாம்பரகதா வாணி ஸரீரம்விநா
கிஸ்மாநாதய்யி ஸீரத்ருஷ்வ பிர், யதி, க்ருதே கண்வாதிபி ஸ்விஹ்ருதை:
தந்நாஸ்சர்யம் இதம்புந: கலியுகே தூரிபவத் ஸத்குணே
சோஷ்ஸ்ரோஷீத் இதிதம் கிரம்மஹத் தாஹோ
விஸ்மாபனம் ஸ்ரீபர:
இவற்றின் பொருள்: கிருத யுகத்தில், துஷ்யந்தன் போன்ற அரசர்களும் கண்வர்போன்ற முனிவர்களும் அசரீரி கேட்டார்கள் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், என்ன ஆச்சரியம் ! நன்மைகள் எல்லாம் குறைந்துள்ள இந்தக் கலியுகத்தில் ஸ்ரீபரன் என்ற பெயரை உடைய ராஜசிம்மன் அசரீரி கேட்டது வியப்பிலும் வியப்பே. இரா.விக்ரமன்,சிதம்பரம்.