Thursday, May 22, 2025
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என அழைப்பட்டது.கல்வெட்டுகளில்இறைவன் திருப்பெயர் திருகண்ணீசுவரமுடையார். இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு சோழர்காலத்தில் புதிப்பிக்கபட்டிருக்கலாம் தற்போது நடனபாதேஸ்வர் கோயில் என அழைக்கப்படுகிறது.இக்கோயில் திருநாவுகரசரால் பாடல் பெற்ற தலமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.இங்கு பழைமையான கல்வெட்டு இரண்டாம் இராஜேந்திர சோழன்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் என தொடங்கும் அக்கல்வெட்டில் ஆணத்தான் சூற்றி சம்பந்தன் என்பவன் இக்கோயில் இறைவனுக்கு நுந்தாவிளக்கெரிக்க மதுராந்தகன் மாடையோடுக்கிய 18 கழஞ்சு பொன் அளித்துள்ளான்.இம்மன்னர் காலத்திலும் இராஜேந்திர சோழவளநாட்டு பவித்திரமாணிக்க வளநாட்டு சோழகுலவல்லி நல்லூர் என இவ்வூர் அழைக்கப்பட்டது.முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் 38 ஆம் ஆண்டு கல்வெட்டில் அரசப்பிரதிநிகள் தில்லை கூத்தன்,திருவேகம்பமுடையான் கல்கண்டன்,சாத்தான் என்போர் 9 நொந்தா விளக்கெரிக்க தானங்கள் அளித்துள்ளனர்.இம்மன்னது 40 ஆம் ஆட்சி கல்வெட்டு இக்கோயில் தனவாக்களப்பாளன்,செல்லையன் தொண்மைப்பாக்கமுடையான்,உமையவள் நங்கையென விளக்கெரிக்க ஆடுகளை தானமாக விட்டுள்ளனர்.இரண்டாம் இராஜராஜனின் 14ஆம் ஆட்சி ஆண்டில் இறைவனுக்கு திருவமுது படைக்க நிலதானம் வழங்கியுள்ளனர். முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் 14 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டில் அழகிய சிற்றம்பலமுடையான் மன்றிற் குனிக்கும் பெருமானான அபிமான துங்க பல்லவரையர் என்பவன் திருப்பள்ளியெழுச்சிக்கு தானம் வழங்கிய கல்வெட்டு:மா நிலம், அரிசி குறுணி கறி அமுது,உப்பு அமுது,மிளகமுது நெய் அமுது தேங்காய் பாக்கு மற்றும் நில அளவு போன்றவை குறிப்பிடும் முக்கிய கல்வெட்டாகும்.முதல் குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் விஜய நகர மன்னர் சாளுவ நரசிம்ம தேவ மகாராஜன் ஆட்சியிலும் திருப்பணி செய்யப்பட்டது.
நன்றி:தென்னிந்திய கல்வெட்டு தொகுதி, திருவதிகை திருக்கோயில்கள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
Subscribe to:
Posts (Atom)
சோழகுலவல்லி நல்லூர் திருகண்டேஸ்வரம் (திருகண்ணீசுரம்)
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சோழகுலவல்லி நல்லூரில் திருகண்ணீசுரம் என ...

-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் பிறந்த இல்லம்.இந்த இல்லம் ஸ்ரீ காஞ்சி காமக்கோடி பீடம் மடத்திடம் உள்ளது. வேத சிவாகம திருமுறை ...