Wednesday, June 8, 2022
எகிப்து பெண் கடவுள் ஐசிஸிசும் கண்ணகியும்
ஐசிஸ் மற்றும் கண்ணகி
எகிப்திய பெண்கடவுள் ஐசிஸ் வழிபாடே கண்ணகி வழிபாடு என கிறிஸ் மார்கன்(Isis: Goddess of Egypt & India) என்ற அறிஞர் முடிவு கட்டிவிட்டார்.கண்ணகி வாழ்ந்த காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு ஐசிஸ் கடவுள் பற்றிய ஓவியம் கிடைப்பது கி.மு.1360 கண்ணகி கதை ஐசிஸ் கடவுள் கதையும் சில இடங்களில் ஒத்து போனாலும் இருவர் வரலாறும் முற்றிலும் வேறு பட்டவை.எகிப்து கடவுள் ஐசிஸ் வரலாறு : வானத்தின் தாய் நியூட் பூமியின் தந்தை கெப் இருவருக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ஒரிசைஸ்,ஐசிஸ்,சேத்,நெப்திஸ், பைபளின் கெய்ன்.ஒரிசைஸ் தனது தங்கை ஐசிசை திருமணம் செய்கிறான்.சேத் தனது தங்கை நெப்திசை திருமணம் செய்கிறான்.அரியணை ஆசையால் சேத் ஒரிசை கொன்று ஒரு பெட்டியில் வைத்து நைல் நதியில் விடுகிறான் ஒரிசைஸ் மனைவி ஐசிஸ் அவனை தேடி அலைந்து பெட்டியை கண்டுபிடிக்கிறாள்.ஆனால் மறுபடியும் சேத் ஒரிசைஸ் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசி விடுகிறான். மறுபடியும் ஐசிஸ் ஒரிசைஸ் உடல்பாகங்களை தேடி அலைந்து கண்டு பிடித்து அவற்றை ஒன்றாக்கி தன் சக்தியால் அவனை உயிர்பித்து அவன் மூலம் ஒரு மகனை பெற்றெடுக்கிறாள்.மீண்டும் ஒரிசைஸ் இறந்து பாதாள கல்லறைகளின் தெய்வம் ஆகிறான்.ஐசிஸிசும் அவள் குழந்தை ஹோரசும் சிறந்த தாய்சேய் உருவங்களாக போற்ற படுகின்றனர்.ஐசிஸ் தனது மகன் ஹோரஸ் வளர்ந்தவுடன் அவனை கொண்டு தனது கணவனை கொன்ற சேத்தை பழிவாங்கி ஆட்சியை கைப்பற்றுகிறாள்.எகிப்தில் ஐசிஸ் சிறந்த பெண் தெய்வமாக போற்ற படுகின்றாள்.எகிப்தில் ரோமனியர் ஆட்சி நடைப்பெற்றது.அவர்களும் ஐசிஸ்சை கடல் தெய்வமாக போற்றினர்.ஐசிஸ் வழிபாடு ரோமனிலும் பரவியது அவர்கள் கி.பி.1,2 நூற்றானண்டில் இந்தியாவில் வணிகம் செய்தபோது கேரளாவில் உள்ள முசிறி (கொடுங்கலூர்) துறைமுகத்தில் இறங்கி வணிகம் செய்தனர்.அங்கு உள்ள குரும்பாதேவி கோயிலை கண்ணகி கோயிலை தற்போது காளிகோயில் அதில் உள்ள ரகசிய அறை வழிபாட்டை ஐசிஸ் வழிபாடு என்றும் அக்கோயிலை எகிப்து ரோமானியர் கட்டியது என்றும் அதை இந்துக்கள் தெய்வம் கைப்பற்றியது அது பிரமிடு வடிவ கோயில் என்றும் கூறுகிறார்கள்.என் முன்பதிவில் (கொடுங்கலுர் பகவதி கோயிலும் கண்ணகி சாமதியும்) என்ற பதிவில் முழுமையாக எழுதியுள்ளேன்.அந்த கோயில் செங்குட்டுவன் கட்டி இளங்கோவடிகள் வழியில் வந்த அடிகள் என்பவர்கள் அந்த அறையில் ஒரு நாள் மட்டும் வழிபாடு நடத்தி வந்தனர். நடுகல் வழிபாடும் அந்த ரகசிய அறையில் நடைபெறுகிறது. சமணர்கள் இந்தியாவில் ஐசிஸ் வழிபாடு நடத்துவர்கள் என்றும் அவர்களிடமிருந்து இந்துக்கள் பிடுங்கி அதை காளி கோயிலாக மாற்றிவிட்டனர் எனக் கூறுகிறார் அவ்வறிஞர்.கி.பி 2.ஆம் நூற்றாண்டில் புகார் நகரில் வாழ்ந்த கண்ணகியும் அதற்கு 1500 முன்பு வழிபட்ட ஐசிஸ் கடவுள் வழிபாடு எப்படி ஒன்றாகும்.சிலப்பதிகாரத்தில் கண்ணகியே தான் வாழாந்ததற்கான பல சான்றுகளை கூறுகின்றாள்.சிலப்பதிகாரம் நடந்ததிற்கு இங்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.எகிப்தியர்கள் ரோமானியர்கள் வணிகம் செய்ய வந்ததினால் இங்கு ஏற்கனவே இருந்த கண்ணகி கோயிலை எந்த ஆதாரமும் இல்லாமல் அது ஐசிஸ் கோயில் என்று கூறிவிட்டார் இளங்கோவடிகள் ஐசிஸ் கதையை மாற்றி சிலப்பதிகாரம் இயற்றியது போலவும் கூறுகிறார். அப்படியென்றால் கேரளாவில் உள்ள அனைத்து கோயிலையும் வணிகம் செய்ய வந்த எகிப்தியர்கள் பிரமிடு வடிவில் கட்டிவிட்டனர் என கூறுவார்களோ.கேரளம்,இலங்கை மட்டுமே கண்ணகி வழிபாடு உள்ளது தமிழ் நாட்டில் பிறந்த கண்ணகிக்கு கோயிலே இல்லை என்கின்றனர்.கண்ணகி மாரி என்ற மழை தெய்வமாக ஒவ்வொரு ஊரிலும் கிராம தேவதையாக இருக்கின்றாள்.அவள் வழிபாடு நாகக்கன்னி வழிபாட்டுடனும் கலந்து விட்டது.தமிழகம் செய்த தவப்பயனால் இத்தெய்வம் இங்கு வந்து பிறந்தது.
(விக்ரமன் ராமன்)
Subscribe to:
Posts (Atom)
சோழ குலமாணிக்கம்
சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...
-
பாண்டியன் பராந்தக வீரநாரயணன் தளவாய்புரம் செப்பேடு என அழைக்கப்படுகிறது.இது திருநெல்வேலி அருகே தளவாய்புரம் என்ற கிராமத்தில் கிடைத்த செப்பேடாகு...
-
மதுரையில் கண்ணகி முன்பு தோன்றி நான் மதுரையின் அதிதெய்வம் என்றும் கண்ணகிக்கு முன் பிறப்பை கூறி ஊழ்வினையாலே உனக்கு இப்படி நடந்தது என்றும் முன...
-
கரிகாலசோழன் பட்டினபாலை இயற்றிய உருத்திக்கண்ணாருக்கு பரிசாக அளித்த பதினாறுகால் மண்டபம் ‘‘வெறியார் தவளத்...